“புதிய அரசியல் யாப்பும்”, “அரசியல் தீர்வும்” குண்டுவெடிப்புக்களால் சிதறிப் பறந்து போய்விட்டன என்கிறார்கள் இப்போது

“புதிய அரசியல் யாப்பு”, “அரசியல் தீர்வு” என்று பேசி வந்தவர்கள் இவர்கள். சில மாதங்களுக்குள் வானத்தைப் பிடுங்கிப் பூமியில் நடுவோம், நட்சத்திரங்களைப் பிடுங்கித் தோரணங் கட்டுவோம் என்று தமிழ் மக்களுக்கு பொய்யான, நடக்கமுடியாத வாக்குறுதிகளை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது மேற்படி உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புக்களால் வானம் பிளந்து நொருங்கிவிட்டது, நட்சத்திரங்கள் சிதறிப் பறந்துவிட்டன, எனவே “புதிய அரசியல் யாப்பும்”, “அரசியல் தீர்வும்” குண்டுவெடிப்புக்களால் சிதறிப் பறந்து போய்விட்டன என்று அப்பாவித் தமிழ் மக்களை இலகுவாக ஏமாற்ற வாய்ப்பு கிடைத்துவிட்டது.

இப்பின்னணியில் மாற்று அரசியல் பற்றிப் பேசுகின்ற சக்திகள் தம்மை ஒன்றுபட்ட சக்தியாக நிரூபிக்கத் தவறினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு துணை போனவர்களான வரலாற்றுப் பழிக்கும், பாவத்திற்கும் உள்ளாவர்.

தனிப்பட்ட அனைத்துவகை சுயநலங்களுக்கும் மூட்டை கட்டிவிட்டு, கேட்பாரின்றி இனப்படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்களின் நல்வாழ்வை முதன்மைப்படுத்தி, நடைமுறைச் சாத்தியமான உடனடி தற்காப்பு கோரிக்கைகளின் அடிப்படையில் ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.

இரண்டாவது முள்ளிவாய்க்காலும் பரந்துபட்ட மாற்றுத் தலைமையும்
Link: https://www.tamilwin.com/special/01/215354?ref=rightsidebar-article

Be the first to comment on "“புதிய அரசியல் யாப்பும்”, “அரசியல் தீர்வும்” குண்டுவெடிப்புக்களால் சிதறிப் பறந்து போய்விட்டன என்கிறார்கள் இப்போது"

Leave a comment

Your email address will not be published.


*