இலங்கையின் வடகிழக்கில் உள்ள சிங்கள இராணுவத்திற்கு சீன உதவியை நிறுத்துமாறு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் பாம்போயை கெடுக்கிறார்கள் அமெரிக்க தமிழர்கள்

ஸ்ரீலங்காவின் வடகிழக்கில் உள்ள சிங்கள இராணுவத்திற்கு சீனாவின் உதவியை நிறுத்துமாறு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் பாம்போயை அமெரிக்க தமிழர்கள் கேட்கிறார்கள்

வடக்கு கிழக்கில் சீன, ஸ்ரீலங்காவுக்கான இராணுவ ரீதியான உதவியை நிறுத்துவதற்கு அமெரிக்க வெளிவிவகாரச் செயலகத்திற்கு அமெரிக்க தமிழர்கள் அனுப்பிய கடிதத்தின் தமிழ் வடிவம் பின்வருமானது :

மரியாதைக்குரிய மைக் பாம்போ
மாநில செயலாளர்
அமெரிக்க அரசுத்துறை
2201 C Street NW
வாஷிங்டன், DC 20520

Re: வடகிழக்கு ஸ்ரீலங்காவில் இராணுவத்துக்கான சீனர்களின் உதவியை தடுத்து நிறுத்துமாறு, அமெரிக்க செயலாளரை கேட்கிறோம்.

அன்புள்ள செயலாளர் பாம்போ,

இலங்கையின் வடகிழக்கு பகுதியில் சீனத் தலையீட்டை தடுத்து நிறுத்துமாறு தமிழர்களான நாங்கள் கோரிக்கை விடுகின்றோம்.

வடகிழக்கு, தமிழர்களின் பரம்பரை மற்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்களின் தாய்நாடு ஆகும்.

தமிழர்கள் தங்களுடைய சுதந்திரத்திற்காக போராடிய போது, தமிழர் தாயகத்தை அழிக்கவும், 145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கும் சீன கொடூரமான ஆயுதங்களை கொடுத்து உதவியது இங்கு குறிப்பிடத்தக்கது.

சீனர்கள் இரக்கமற்றவர்கள், மனித உரிமைகளை மதிப்பவர்களில்லை. சீனர்கள் வடகிழக்குக்கு வந்து, தமிழர் சுதந்திர போராட்டத்தை ஒடுக்குவதை நாம் விரும்பவில்லை.

வட -கிழக்கு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நாங்கள் அமெரிக்கர்களையே விரும்புவோம்.
அண்மையில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதிகளின் தாக்குதல்களின் பின் இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு , அமெரிக்க இராணுவம் இலங்கைக்கு வந்து இந்த அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும்.

வட -கிழக்கில் இருந்து இனப்படுகொலை புரிந்த ஸ்ரீலங்கா இராணுவத்தை அங்கிருந்து அகற்றவும், தமிழர்கள் சமாதானமாக வாழ அனுமதிக்கவும், ஸ்ரீலங்காவின் இந்த பகுதிக்கு ஐ.நா அமைதி காக்கும் படை கொண்டு வருவது அவசியம்.

இறுதி ஆய்வில், தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க, வாக்கெடுப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய அமெரிக்கா உதவவேண்டும் . தமிழரை பொறுத்தளவில், ஸ்ரீலங்கா அரசாங்கம் நம்பகமான ஒரு அரசாங்கமாக இல்லை .

உங்கள் நேரம் மற்றும் கருத்தில் கொள்வதற்கு மிகவும் நன்றி.

உண்மையுள்ள,
டிரம்ப்புக்கான தமிழர் அமைப்பு

Be the first to comment on "இலங்கையின் வடகிழக்கில் உள்ள சிங்கள இராணுவத்திற்கு சீன உதவியை நிறுத்துமாறு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் பாம்போயை கெடுக்கிறார்கள் அமெரிக்க தமிழர்கள்"

Leave a comment

Your email address will not be published.


*